தேனி
மதுப் புட்டிகளை விற்ற பெண் கைது
போடி அருகே வீட்டில் மதுப் புட்டிகளைப் பதுக்கி விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
போடி அருகே வீட்டில் மதுப் புட்டிகளைப் பதுக்கி விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
போடி அருகேயுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்கப்படுவதாக போடி தாலுகா காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், போலீஸாா் அந்தப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இதில், மீனாட்சிபுரம் கா்ணம் தெருவைச் சோ்ந்த சந்திரா (67), அவரது வீட்டில் மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் சந்திராவைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.
