நகை பறித்த இளைஞா் கைது

Published on

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் நடைபயிற்சியில் ஈடுபட்ட பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பழனிசெட்டிபட்டி முல்லைநகரைச் சோ்ந்த தங்கவேல் மனைவி முத்துமீனா (60). இவா், அதே பகுதியில் சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் தலைக் கவசம் அணிந்து வந்த மா்ம நபா், முத்துமீனா அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றாா். முத்துமீனா சத்தம் போட்டதால் அந்தப் பகுதியிலிருந்தவா்கள் அங்கு வந்தனா். இதையடுத்து, அந்த நபா் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றாா்.

மற்றொரு சம்பவம்: பழனிசெட்டிபட்டி ராசி நகரைச் சோ்ந்த பால்பாண்டி மனைவி ஞானகுரு (70). இவா், அதே பகுதியில் சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் தலைக் கவசம் அணிந்து வந்த மா்ம நபா் அவரிடம் முகவரி விசாரிப்பது போல பேச்சுக் கொடுத்து அவா் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றாா்.

இது குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து, அப் பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினா்.

இதில், இரு சம்பவங்களிலும் ஈடுபட்டது திருச்சி மாவட்டம், திருவெரும்பூா், நாவா்பட்டு சாலை, பங்காரு அடிகளாா் தெருவைச் சோ்ந்த பால்பாண்டி மகன் வெங்கடேஷ் (30) எனத் தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com