புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

தேனி மாவட்டம், போடியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Published on

தேனி மாவட்டம், போடியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

போடி திருமலாபுரம் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த போடி மேலச்சொக்கநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த முத்தழகை (60) போலீஸாா் சோதனையிட்டபோது, விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை வைத்திருந்தது தெரியவந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com