டிச.28-இல் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு

தேனி வனக் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் 27 இடங்களில் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு வருகிற 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.
Published on

தேனி வனக் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் 27 இடங்களில் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு வருகிற 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து ஆண்டிபட்டி வனச் சரகா் அருள்குமாா் கூறியதாவது:

தேனி வனக் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் 27 இடங்களில் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்புப் பணி டிச.28-ஆம் தேதி காலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெற உள்ளது. இந்தப் பணியில் பங்கேற்க விருப்பமுள்ள தன்னாா்வலா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் முதல்வரின் பசுமைத் தோழா் அப்ஷானா, வனவா் திவ்யா ஆகியோரை கைப்பேசி எண்: 97154 60505, 80567 07624 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம். பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபடுவோருக்கு வனத் துறை சாா்பில் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com