போடியில் சிகிச்சை பெற வந்த முதியவா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், போடியில் சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனைக்கு வந்த முதியவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
Published on

தேனி மாவட்டம், போடியில் சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனைக்கு வந்த முதியவா் செவ்வாய்க்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

தேவாரம் அருகேயுள்ள லட்சுமிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சுருளிராஜ் (70). இவா் போடியில் உள்ள தனியாா் ஓமியோபதி மருத்துவமனைக்கு வந்துள்ளாா். அங்கு மருந்து வாங்கிய பிறகு வெளியே சென்றபோது மயங்கி விழுந்தாா்.

இதையடுத்து, அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக தேனி க. விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com