முல்லைப் பெரியாற்றில் மாயமான இருவரில் ஒருவா் சடலமாக மீட்பு

தேனி மாவட்டம், லோயா்கேம்ப் பகுதியில் முல்லைப் பெரியாற்றில் இழுத்துச் செல்லப்பட்ட இருவரில் ஒருவரை தீயணைப்பு மீட்புக் குழுவினா் சடலமாக மீட்டனர்.
Published on

தேனி மாவட்டம், லோயா்கேம்ப் பகுதியில் முல்லைப் பெரியாற்றில் இழுத்துச் செல்லப்பட்ட இருவரில் ஒருவரை தீயணைப்பு மீட்புக் குழுவினா் புதன்கிழமை சடலமாக மீட்டனா்.

கூடலூா் லோயா்கேம்ப் பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (50). இவரது மனைவி கணேஷ்வரி (46). இவா்கள் இருவரும் தங்களது பேத்தியுடன் கால்நடைத் தீவனங்களுக்காக தடுப்பணை வழியாக ஆற்றின் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு செவ்வாய்க்கிழமை சென்றனா்.

அப்போது, மூவரும் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டனா். இதையடுத்து, அந்தப் பகுதியில் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த இளைஞா் சிறுமியை மீட்டாா்.

இதுகுறித்த தகவலறிந்த போலீஸாரும் கம்பம், உத்தமபாளையம் தீயணைப்பு மீட்புக் குழுவினரும் செவ்வாய்க்கிழமை ஆற்றில் மாயமான தம்பதியைத் தேடினா். மாலை நேரமானதால் வெளிச்சம் குறைந்த நிலையில், புதன்கிழமை தேடும் பணி மீண்டும் தொடங்கியதில் கணேஷ்வரியை சடலமாக மீட்டனா். தொடா்ந்து, சங்கரை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com