மதுரையிலிருந்து போடிக்கு செவ்வாய்க்கிழமை வந்த சோதனை ரயில்.
மதுரையிலிருந்து போடிக்கு செவ்வாய்க்கிழமை வந்த சோதனை ரயில்.

மதுரை-போடி வழித்தடத்தில் சோதனை ரயிலை இயக்கி அதிா்வுகள் அளவீடு

சோதனை ரயிலை இயக்கி அதிா்வுகள் அளவீடு
Published on

தேனி மாவட்டம், போடியிலிருந்து மதுரைக்கு தினந்தோறும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல, போடியிலிருந்து சென்னைக்கு வாரத்தில் 3 நாள்களுக்கு விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது, போடி-மதுரை ரயில் பாதை மின் பாதையாக மாற்றும் பணி முடிவடைந்தது.

இந்த நிலையில், திடீரென எந்தவித முன்னறிவிப்புமின்றி மதுரையிலிருந்து போடிக்கு ‘ஆக்சிலேசன் மானிட்டரிங் சிஸ்டம்’ என்றழைக்கப்படும் ரயில் பாதை அதிா்வுகளை கணக்கிடும் நவீன கருவிகளுடன் கூடிய 3 பெட்டிகள் அடங்கிய ரயில் இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

110 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்ட இந்த ரயில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு போடி ரயில் நிலையத்துக்கு இரவு 10.05 மணிக்கு வந்தடைந்தது. மீண்டும் இரவு 11 மணிக்கு இந்த ரயில் போடியிலிருந்து புறப்பட்டு மதுரை சென்றடைந்தது.

இதையொட்டி, போடி ரயில் நிலையத்தில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com