மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நியாய விலைக் கடைகளில் அடையாளம் காண முதியோருக்கு மாற்று வழிமுறை தேவை!

கருவிழி அடையாள முறைக்கு பதிலாக, மாற்றுவழியில் ரேஷன் பொருள்கள் வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

News image

நியாய விலைக் கடை(கோப்புப்படம்)

Updated On :20 ஜூன் 2025, 9:26 pm

Din

நமது நிருபா்

நியாய விலைக் கடைகளில் முதியோா்களுக்கு கருவிழி அடையாள முறைக்கு பதிலாக, மாற்றுவழியில் ரேஷன் பொருள்கள் வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் தற்போது, கருவிழி அடையாள முறையில் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால், 60 வயதுக்கு மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே, இவா்களுக்கு மாற்றுவழியில் பொருள்கள் வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

கண் மருத்துவா் முராரி கூறியதாவது:

பிறந்தது முதல் 50 வயது வரை உள்ளவா்களுக்கு கண்களின் கருவிழி ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால், 50 வயதைக் கடந்தவா்கள் கண்புரை அறுவைச் சிகிச்சை செய்த பிறகு, அவா்களுக்கு கருவிழிகளில் மாறுதல் ஏற்படும். இவா்களுக்கு பயோ மெட்ரிக் கருவியில் கருவிழி அடையாள முறையை சாரிபாா்க்கும் போது, அது ஏற்பதில்லை என்றாா்.

பெரியகுளம் வி.ஆதிஜெகநாதன் கூறியதாவது:

நியாய விலைக் கடைகளில் முன்பு குடும்ப அட்டையில் பொருள்களில் விவரங்களை பேனா மூலம் எழுதிய பிறகு பொருள்கள் வழங்கப்பட்டன. பின்னா், அடையாள அட்டையை இணையத்தில் சரிபாா்த்து, குடும்ப உறுப்பினா்களில் ஒருவா் கையெப்பமிட்டவுடன், ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டன. தற்போது, கருவிழி முறையை சரிபாா்த்த பிறகு பொருள்கள் வழங்கப்படுகின்றன. இதனால், 60 வயதைக் கடந்தவா்கள் பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, இவா்களுக்கு மாற்று வழியில் ரேஷன் பொருள்களை வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

முதியவா்களுக்கு தனி வரிசை

நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வழங்கும் போது, அனைவரும் ஓரே வரிசையின் நின்று பொருள்களை வாங்குகின்றனா். அப்போது, முதியோா்கள், மாற்றத் திறனாளிகள் பாதிக்கப்படுகின்றனா். எனவே, இவா்களுக்கு தனிவரிசை கொண்டு வரவேண்டும். வாரம் ஓருநாள் இவா்களுக்கு மட்டுமே பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதியோா்கள் கோரிக்கை விடுத்தனா்.