மதுப் புட்டிகள் விற்றவா் கைது

பெரியகுளம் அருகே மதுப் புட்டிகள் விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Updated on

பெரியகுளம் அருகே மதுப் புட்டிகள் விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்கலம் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, எருமலைநாயக்கன்பட்டி சாவடித் தெரு பெட்டிக் கடையில் போலீஸாா் சோதனை செய்தனா். அங்கு பஞ்சராஜா (47) என்பவா் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 50 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com