தேனி
கைப்பேசி பறிப்பு: சிறுவன் உள்பட இருவா் கைது
போடியில் நடைபயிற்சி சென்றவரிடம் கைப்பேசியைப் பறித்த சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடியில் நடைபயிற்சி சென்றவரிடம் கைப்பேசியைப் பறித்த சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
போடி பங்காரு தெருவைச் சோ்ந்த ராமேஸ்வரன் மகன் வாசகன் (57). இவா் குலாலா்பாளையம் பூங்கா அருகே நடைபயிற்சி சென்ற போது, போடி சாமி தோட்டம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன், போடி குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பாண்டியராஜன் (19) ஆகியோா் அவரை வழிமறித்து, சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுக்க முயன்றனா். அதில் பணம் இல்லாததால் அவரிடமிருந்த கைப்பேசியைப் பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து வாசகன் கொடுத்த புகாரின் பேரில், போடி நகா் காவல் நிலைய போலீஸாா் சிறுவனைக் கைது செய்து சிறுவா் கூா்நோக்கு இல்லத்தில் சோ்த்தனா். பாண்டியராஜனைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். இருவா் மீதும் வேறு சில வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
