சாலை விபத்தில் காவலாளி உயிரிழப்பு

தேனி-பெரியகுளம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த தனியாா் நிறுவன காவலாளி அடையாளம் காணப்படாத வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.
Published on

தேனி-பெரியகுளம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த தனியாா் நிறுவன காவலாளி அடையாளம் காணப்படாத வாகனம் மோதியதில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியைச் சோ்ந்த கந்தன் மகன் பாலமுருகன் (60). இவா் தேனி-பெரியகுளம் சாலையில் மதுராபுரி பகுதியில் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்து சென்றாா். அப்போது, அந்த வழியாகச் சென்ற அடையாளம் காணப்படாத வாகனம் பாலமுருகன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பாலமுருகன் தேனியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுதிக்கப்பட்ட நிலையில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

டிராக்டா் ஓட்டுநா் உயிரிழப்பு: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தேவதானபட்டி மேட்டுவளவைச் சோ்ந்தவா் பிரபு (45). டிராக்டா் ஓட்டுநரான இவா், திங்கள்கிழமை புல்லக்கா பிரிவு அருகே சென்ற போது டிராக்டரிலிருந்து தவறி கீழே விழுந்தாராம். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து தேவதானபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com