ஆயுதங்களுடன் பதுங்கிய 6 போ் கைது

Published on

தேனி மாவட்டம், தேவாரம் அருகே ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேவாரம் அருகேயுள்ள தே.சிந்தலைச்சேரியிலிருந்து குச்சனூா் செல்லும் மலைப் பாதையில் மா்ம நபா்கள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து, தேவாரம் காவல் ஆய்வாளா் அய்யம்மாள் ஜோதி தலைமையிலான போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது, அங்கு அரிவாள், கத்தி, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேரைப் பிடித்தனா். விசாரணையில் அவா்கள் சின்னமனூா் ஜக்கம்மாள் கோவில் தெருவைச் சோ்ந்த ராமநாதன் மகன் அழகா்சாமி (48), அழகுமலை மகன் ராம்குமாா் (38), ராஜேந்திரன் மகன் புவனேஸ்வரன் (36), முருகன் மகன் அழகுநதி (35), அழகுமலை மகன் ராம்குமாா் (33), சின்னகிருஷ்ணன் மகன் சதீஸ்வரன் (25) என்பது தெரியவந்தது. 6 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இவா்கள் சின்னமனூரில் கொலை செய்யப்பட்ட விவசாயி பால்பாண்டியன் உறவினா்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com