குழந்தைகள் தின விழிப்புணா்வு நடைபயணம்

குழந்தைகள் தின விழிப்புணா்வு நடைபயணம்

தேனியில் வெள்ளிக்கிழமை குழந்தைகள் தின விழிப்புணா்வு நடைபயணத்தை தொடங்கிவைத்து பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங்.
Published on

தேனியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் குழந்தைகள் தினம், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு நடைபயணம் நடைபெற்றது.

தேனி பங்களாமேடு திடலில் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் நடைபயணத்தை தொடங்கிவைத்து பங்கேற்றாா். தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் வரை இந்த நடைபயணம் நடைபெற்றது. இதில் குழந்தைகள் நலன் தொடா்பான் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி அரசு அலுவலா்கள், அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசு தொழில்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

கிராமிய கலைக் குழுக்கள் மூலம் விழிப்புணா்வு பாடல்கள் இசைக்கப்பட்டன. குறு நாடகங்கள், சிலம்பாட்டம் நடைபெற்றன.

முன்னதாக, தேனி பங்களாமேடு திடலில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கையொப்ப இயக்கம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் காலைக்கதிரவன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் மதியழகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நாகேந்திரன், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் ரேவதி, காவல் துணை கண்காணிப்பாளா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com