தேங்காய் விலை சரிவு: விவசாயிகள் கவலை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், க.மயிலை பகுதியில் தேங்காய் விலை சரிந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.
Published on

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், க.மயிலை பகுதியில் தேங்காய் விலை சரிந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

க.மயிலை, வருஷநாடு ஆகிய பகுதிகளில் அதிகளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் தேங்காய்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

நிகழாண்டில், தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளதால், விலை சரிந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவசாயிகளிடமிருந்து ஒரு டன் தேங்காய் ரூ.65 ஆயிரத்துக்கும், தேங்காய் ஒன்று ரூ.33-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. படிப்படியாக விலை சரிந்து தற்போது ஒரு டன் தேங்காய் ரூ.56 ஆயிரத்துக்கும், தேங்காய் ஒன்று ரூ.29-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.

விலை சரிவால் கிட்டங்களில் விற்பனையாகாமல் தேங்காய்கள் தேங்கிக் கிடப்பதாகவும், வெளி மாநிலங்களிலிருந்து அதிகளவில் தேங்காய் வரத்து உள்ளதால், விலை சரிந்து வருவதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனா். தேங்காய் உற்பத்தி அதிகரித்தும் விலை சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com