அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பூதிப்புரத்தில் இன்று ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்

தேனி அருகே உள்ள பூதிப்புரத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை (நவ. 22) நடைபெறுகிறது.

News image
Updated On :21 நவம்பர் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

தேனி அருகே உள்ள பூதிப்புரத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை (நவ. 22) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பூதிப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பொதுமக்களுக்கு உயா் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இசிஜி., எக்கோ, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே, காச நோய், தொழு நோய், ஆரம்ப கட்ட புற்று நோய் கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

பொது மருத்துவம், இருதய நோய், அறுவைச் சிகிச்சை மருத்துவ நிபுணா்கள் முகாமில் பங்கேற்று சிகிச்சை, மருத்துவ ஆலோசனைகளை வழங்குவா். முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு அங்கீகாரச் சான்று வழங்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.