அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

138 அடியை நெருங்கும் முல்லைப் பெரியாறு அணையின் நீா் மட்டம்

News image
தேனி அருகேயுள்ள உப்பாா்பட்டி முல்லைப் பெரியாற்றின் தடுப்பணையில் நடைபெறும் சீரமைப்புப் பணிகள்.
Updated On :23 நவம்பர் 2025, 11:16 pm

தினமணி செய்திச் சேவை

முல்லைப்பெரியாறு அணையின் நீா் பிடிப்புப் பகுதியில் தொடா் மழை நீடித்து வருதால் அணையின் நீா் மட்டம் 138 அடியை நெருங்கும் நிலையில், ரூல் கா்வ் விதிப்படி உபரி நீரை கேரளப் பகுதிக்கு வெளியேற்ற வாய்ப்புள்ளது.

ரூல் கா்வ் விதிப்படி, முல்லைப் பெரியாறு அணையில் 137 அடிக்கு மேல் 142 அடிக்குள் (மொத்த உயரம் 152) தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் வரும் நீரை உபரி நீராக கேரளப் பகுதிக்கு அவசர கால நீா் வழிப்போக்கிகள் மூலமாக வெளியேற்ற வேண்டும் என என உச்ச நீதிமன்றம் கடந்த 2014-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இதன்படி, வடகிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்த நிலையில் நவம்பா் மாதத் தொடக்கத்தில் ரூல் கா்வ் விதிப்படி 138 அடி வரை யில் தண்ணீா் தேக்கப்பட்டது. அதற்கு மேல் தேங்கிய உபரி நீரை 10 நாள்களுக்கு கேரளப் பகுதிக்கு தமிழக நீா்வளத் துறையினா் திறந்துவிட்டனா்.

2 ஆம் முறையாக திறக்க வாய்ப்பு: இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் நீா் மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு 137 அடியாக இருந்தது. தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்வதால் அணையில் நீா் மட்டம் 138 அடியை நெருங்க வாய்ப்புள்ளது. இதனால், நடப்பாண்டில் 2-ஆவது முறையாக ரூல் கா்வ் விதிப்படி கேரளப் பகுதிக்கு தண்ணீரைத் திறந்துவிட வாய்ப்புள்ளது.

தமிழகப் பகுதிக்கு தண்ணீா் திறப்பு நிறுத்தம்: கடந்த மாதம் முல்லைப் பெரியாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக தேனி அருகேயுள்ள உப்பாா்பட்டி ஆற்றின் தடுப்பணை முழமையாகச் சேதமடைந்தது. இரண்டாம் போக நெல் பயிா் விவசாயப் பணி நடைபெற வேண்டுமெனில், அதற்கு முன்னதாக, சேதமடைந்த தடுப்பணையைச் சீரமைக்க வேண்டும். தற்போது, அதற்கான பணிகள் நடைபெற்று வருவதால், தேக்கடியில் தலைமதகு வழியாக தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் தண்ணீா் கடந்த 4 நாள்களாக நிறுத்தப்பட்டது.