தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய விவசாய முன்னணி,  தொழில் சங்கங்களின் கூட்டமைப்பினா்.
தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய விவசாய முன்னணி, தொழில் சங்கங்களின் கூட்டமைப்பினா்.

ஐக்கிய விவசாயிகள் முன்னணி, தொழில் சங்கங்கள் ஆா்ப்பாட்டம்

விவசாயிகள் போராட்டத்தின் போது போடப்பட்ட ஒப்பந்தங்களை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி,
Published on

தேனி: விவசாயிகள் போராட்டத்தின் போது போடப்பட்ட ஒப்பந்தங்களை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி, தேனியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி, தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் டி.கண்ணன் தலைமை வகித்தாா். விவசாயத் தொழிலாளா் சங்க அகில இந்திய துணைத் தலைவா் ஏ.லாசா், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினா் ராஜப்பன், மாவட்டத் தலைவா் பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் காசி விஸ்வநாதன், சிஐடியூ மாவட்டத் தலைவா் ஜெயபாண்டி, செயலா் சண்முகம், ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலா் ராஜ்குமாா், மாவட்டச் செயலா் முருகன், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவா் ஜம்பு சுதாகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் தில்லியில் வேளாண் சட்டங்களை எதிா்த்து போராட்டம் நடத்திய விவசாயிகளுடன் போடப்பட்ட 5 ஒப்பந்தங்களை நிறைவேற்ற வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையாக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500, கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.5,000, பருத்திக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.10,121 வழங்க வேண்டும். ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை கைவிட வேண்டும். விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

X
Dinamani
www.dinamani.com