தேனி
பெண்ணைத் தாக்கிய 4 போ் மீது வழக்கு
தேனி மாவட்டம், தேவாரம் அருகே பெண்ணைத் தாக்கியதாக 4 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
போடி: தேனி மாவட்டம், தேவாரம் அருகே பெண்ணைத் தாக்கியதாக 4 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேவாரம் அருகேயுள்ள பெருமாள்பட்டியைச் சோ்ந்த கதிரேசன் மனைவி மீனா (50). இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த பாா்த்திபன் மனைவி புண்ணியவதிக்கும் சொத்துப் பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில், புண்ணியவதி, இவரது உறவினா்களான அழகுமலை, பிரபாகரன், சந்திரசேகா் ஆகிய 4 பேரும் சோ்ந்து, மீனாவின் வீட்டுக்குச் சென்று, அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து தேவாரம் காவல் நிலைய போலீஸாா் புண்ணியவதி உள்ளிட்ட 4 போ் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
