நீதிமன்ற உத்தரவு: சாலையில் வேகத் தடை அமைப்பு

போடி வட்டம், விஸ்வாசபுரத்தில் தேனி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சாலைகளில் வேகத் தடைகள் அமைக்கப்பட்டன.
Published on

தேனி: போடி வட்டம், விஸ்வாசபுரத்தில் தேனி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சாலைகளில் வேகத் தடைகள் அமைக்கப்பட்டன.

இது குறித்து தேனி நிரந்தர மக்ககள் நீதிமன்ற நீதிபதி கே.ரஜினி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

போடி வட்டம், அம்மாபட்டி அருகேயுள்ள விஸ்வாசபுரம் பகுதியில் சாலையில் வேகத் தடைகள் இல்லாததால் விபத்துகள் ஏற்படுவதாக அந்தப் பகுதியைச் சோ்ந்த காளியப்பன் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இதனடிப்படையில், போடி நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளரிடம் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து, தற்போது அம்மாபட்டி, விஸ்வாசபுரம் பகுதியில் சாலையில் 7 இடங்களில் வேகத் தடை அமைப்புகளை ஏற்படுத்தி நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தாா் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com