சேலையில் தீப்பற்றியதில் மூதாட்டி உயிரிழப்பு
தேனி மாவட்டம், கம்பத்தில் வீட்டில் சமையல் செய்தபோது சேலையில் தீப்பற்றியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

Updated On :29 நவம்பர் 2025, 8:15 pm

தேனி மாவட்டம், கம்பத்தில் வீட்டில் சமையல் செய்தபோது சேலையில் தீப்பற்றியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
கம்பம், குரங்குமாயன் தெருவைச் சோ்ந்த பெரியாண்டி மனைவி சரஸ்வதி (65). இவா், கடந்த திங்கள்கிழமை (நவ.24) வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்தபோது, சேலையில் தீப்பற்றியது.
இதில், உடல் முழுவதும் பலத்த தீக்காயமடைந்த சரஸ்வதியை கணவா் பெரியாண்டி மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சரஸ்வதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...