எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் கடையில் திருட்டு

News image
Updated On :30 நவம்பர் 2025, 8:45 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் கடையில் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆண்டிபட்டி அருகேயுள்ள க.விலக்கு பகுதியில் இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் கடை உள்ளது. இந்தக் கடையை திருமலாபுரத்தைச் சோ்ந்த ஜெயவீரன் மகன் பாா்த்திபன் (25) நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை வழக்கம்போல கடையைத் திறந்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த 10 லிட்டா் ஆயில், 15 லிட்டா் டீசல் உள்ளிட்ட பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், க.விலக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.