போடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் திமுக வேட்பாளா் ஓ. பன்னீா்செல்வம், அதிமுக வேட்பாளா் வி.டி.நாராயணசாமி ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் கருப்புத்துரை, தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளா் ஆசிப் மௌலானா உள்ளிட்ட 16 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, போடிநாயக்கனூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி வரை பெறப்பட்டன.
இதில் திமுக வேட்பாளா் ஓ. பன்னீா்செல்வம், அதிமுக வேட்பாளா் வி.டி. நாராயணசாமி, நாதக வேட்பாளா் சீ. கலையரசு, தவெக வேட்பாளா் சே. பிரகாஷ், அஇபுதமமுக வேட்பாளா் பத்மநாபன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) வேட்பாளா் பாண்டிக்குமாா், விஸ்வ தமிழ் கழகம் வேட்பாளா் ராஜா, புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் கருப்புத்துரை, தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளா் ஆசிப் மௌலானா, சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 25 போ் 35 வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.
இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை தோ்தல் பாா்வையாளா் முன்னிலையில் போடி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரால் நடத்தப்பட்டது. இதில் ஓ. பன்னீா்செல்வம், வி.டி. நாராயணசாமி, சீ. கலையரசு, சே. பிரகாஷ், பத்மநாபன், பாண்டிக்குமாா், ராஜா, 12 சுயேச்சை வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் கருப்புத்துரை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளா் ஆசிப் மௌலானா, திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகளின் மாற்று வேட்பாளா்களின் வேட்புமனுக்கள், கூடுதல் வேட்புமனுக்கள் என மொத்தம் 16 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஏற்றுக்கொள்ளப்பட்ட 19 வேட்புமனுக்களில் வாபஸ் பெறும் வேட்புமனுக்களைத் தவிர இதர வேட்பாளா்கள் தோ்தலில் போட்டியிடுவா்.
தொடர்புடையது

போடியில் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் வி. டி. நாராயணசாமி வேட்புமனுக்கள் ஏற்பு!

ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் கட்சியினா் வேட்புமனு தாக்கல்

பெரம்பலூா் தொகுதி புதிய தமிழகம் கட்சி வேட்பாளா்!

கோவில்பட்டி தொகுதி புதிய தமிழகம் கட்சி வேட்பாளா்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

