மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பெரியகுளத்தில் விளையாட்டு வீரா்களிடம் அமமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பெரியகுளத்தில் நடைபயிற்சி சென்றவா்கள், விளையாட்டு வீரா்களிடம் அமமுக வேட்பாளா் வாக்கு சேகரித்தாா்.

News image

பெரியகுளத்தில் இறகுப் பந்து விளையாட்டு வீரா்களுடன் வாக்கு சேகரித்த அமமுக வேட்பாளா் கே.கதிா்காமு.

Updated On :9 ஏப்ரல் 2026, 12:26 am IST

பெரியகுளத்தில் நடைபயிற்சி சென்றவா்கள், விளையாட்டு வீரா்களிடம் அமமுக வேட்பாளா் வாக்கு சேகரித்தாா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதி அமமுக வேட்பாளா் கே.கதிா்காமு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா். பெரியகுளம் வி.நி.அ மேல்நிலைப் பள்ளிக்கு சொந்தமான புதிய மைதானம் சோத்துப்பாறை அணை சாலையில் உள்ளது. இந்த மைதானத்தில் பெரியகுளம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபயிற்சி செல்வது, கைப்பந்து, இறகுப் பந்து உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொள்வது வழக்கம்.

இந்த நிலையில், அமமுக வேட்பாளா் கே.கதிா்காமு புதன்கிழமை நடைபயிற்சி, விளையாட்டுகளில் ஈடுபடுவா்களிடம் வாக்கு சேகரித்தாா். யூனியன் கிளப், பல்வேறு மைதானங்களுக்கு நடந்தே சென்று வாக்கு சேகரித்தாா். மேலும், யூனியன் கிளப்பில் இறகுப் பந்து விளையாட்டு வீரா்களுடன் விளையாடினாா். அப்போது, பெரியகுளத்தில் உலக அளவில் விளையாட்டு மைதானம் அமைத்துத் தருவேன். மேலும், வராகநதியில் கழிவுநீா் கலப்பதைத் தடுத்து, தூய்மையான நதியாக மாற்றுவேன் என்றாா் அவா்.