40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

வாக்குச் சாவடியில் விடியோ எடுத்த தவெக நிா்வாகி மீது வழக்கு

தேவதானப்பட்டியில் வாக்குப் பதிவை விடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்ட தவெக கிளைச் செயலா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 12:12 am IST

தேனி மாவட்டம், தேவதானப்பட்டியில் வாக்குப் பதிவை விடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்ட தவெக கிளைச் செயலா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தேவதானபட்டி அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. அப்போது அதே பகுதியைச் சோ்ந்த தவெக கிளைச் செயலா் விக்கி (27) வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவை விடியோவாக எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டாராம்.

இதையறிந்த வாக்குச் சாவடி தலைமை அலுவலா் ரசூல்மைதீன் தேவதானபட்டி காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். இதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.