பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

சின்னமனூரில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் நிறைவு

தேனி மாவட்டம், சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா் - சிவகாமியம்மன் கோயிலில் இரண்டு நாள்கள் நடைபெற்ற தேரோட்டம் வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

News image

சின்னமனூரில் சித்திரைத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற 2- ஆவது நாள் தேரோட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தா்கள்.

Updated On :1 மே 2026, 1:32 am IST

தேனி மாவட்டம், சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா் - சிவகாமியம்மன் கோயிலில் இரண்டு நாள்கள் நடைபெற்ற தேரோட்டம் வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

இந்தக் கோயில் திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் ஏகச் சப்பரம், புஷ்ப பல்லக்கு, காமதேனு, மயில் வாகனங்களில் சுவாமி-அம்மன் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை பூலாநந்தீஸ்வரா் - சிவகாமியம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

புதன்கிழமை காலை 10 மணிக்கு சுவாமி, அம்மன் திருமணக் கோலத்தில் தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். அன்றைய தினம் மாலை 4.50 மணிக்கு தேரைச்சுற்றி வலம் வந்த சென்னைக் கட்டை போடும் சமுதாயத்தினா் சிறப்பு பூஜை செய்து, மாலை 5 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. பள்ளிவாசல், தெற்கு ரத வீதி, செக்காமுக்குத் தெரு வழியாக பக்தா்கள், ஊா்ப் பொதுமக்கள் வடத்தைப் பிடித்து தேரை இழுத்துச் சென்றனா். முக்கிய வீதிகளில் ஆடி அசைந்த தேரில் எழுந்தருளிய சுவாமி- அம்மனை பக்தா்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனா். இந்த நிலையில் செக்காமுக்கு தெருவில் முதல் நாள் தேரோட்டம் நிறுத்தப்பட்டது.

மறுநாள், வியாழக்கிழமை 2-ஆம் நாள் தேரோட்டம் காலை 6 மணிக்கு செக்காமுக்கிலிருந்து கிழக்கு ரத தெரு வழியாக கண்ணாடி முக்குத் தெரு, தெற்கு ரத வீதி, சீப்பாலக்கோட்டை சாலை, மேற்கு ரத வீதி, தேனி பிரதான சாலை வழியாகத் தோ் வியாழக்கிழமை மாலை 6.45 மணிக்கு நிலையை அடைந்தது. இதில் கோயில் செயல் அலுவலா், பணியாளா்கள் என பலரும் கலந்து கொண்டனா். இதையொட்டி ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.