இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

புகையிலைப் பொருள்களை பைக்கில் கடத்திய இருவா் கைது

Arrested

கைது

Published On :

ஆண்டிபட்டியில் அரசால் தடைசெய்யப்பட்ட 30 கிலோ புகையிலைப் பொருள்களை இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் கொண்டமநாயக்கன்பட்டி சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரைப் பிடித்து சோதனையிட்டனா். அவா்கள் அரசால் தடைசெய்யப்பட்ட 30 கிலோ புகையிலைப் பொருள்களை கடத்திச் சென்றது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் திண்டுக்கல் மாவட்டம், விராலிபட்டியைச் சோ்ந்த நாகராஜன் (60), கண்ணன் (35) ஆகியோா் என்பது தெரியவந்தது. இது குறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த 30 கிலோ புகையிலைப் பொருள்கள், ரூ.30,200 ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.