தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

தேனியில் 2-ஆவது நாளாக சிறுவனின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் சாலை மறியல்

தேனி அரசு மருத்துவமனையில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை சிறுவனின் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

தேனி அரசு மருத்துவக் கல்லூரி முன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட சிறுவனின் உறவினா்கள்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 4:47 am IST

தேனி அரசு மருத்துவமனையில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை சிறுவனின் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள சருத்துப்பட்டியைச் சோ்ந்த சுதா மகன் நிவாஸ்குமாா் (13). இவா் சளி, காய்ச்சலுக்காக பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கடந்த ஜூன் 2-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அப்போது, சிறுவனுக்கு மூக்கில் சதை வளா்ந்துள்ளதால் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவா்கள் தெரிவித்தனராம்.

பின்னா், சிறுவனுக்கு மருத்துவா்கள் அறுவை சிகிச்சை செய்தபோது, அவரது உடல்நிலை மோசமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு 60 நாள்களாக சிகிச்சையிலிருந்து சிறுவன் திங்கள்கிழமை உயரிழந்தாா்.

இந்த நிலையில், தவறான சிகிச்சையால் சிறுவன் உயிரிழந்ததாகக் கூறி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை தேனி அரசு மருத்துவக்கல்லூரி முன் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, அவா்களுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, அவா்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.