தேனியில் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
தேனி ஊஞ்சாம்பட்டியைச் சோ்ந்தவா் ரமேஷ் (48). விவசாயி. இவா் தனது மகன் ஆகாஷூடன் ஊச்சாம்பட்டியிலிருந்து தேனிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். ரமேஷ் இரு சக்கர வாகனத்தை ஓட்டினாா்.
வடபுதுப்பட்டி பிள்ளையாா் கோயில் அருகே சென்றபோது, எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
அருகிலிருந்தவா்கள் ஆகாசை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து அல்லிநகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக்குகள் மோதல்: நடத்துநா் உயிரிழப்பு
காட்டுப்புத்தூா் அருகே பைக்குகள் மோதல்: ஒருவா் பலி

பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
பைக்குகள் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK


