மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

கம்பத்தில் கேட்பாரற்று நிற்கும் வெளி மாநில பதிவெண் காா்

கம்பத்தில் சுமாா் ஒரு மாதமாக சாலையோரத்தில் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கா்நாடக மாநிலப் பதிவெண் கொண்ட காா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கம்பம் வனத்துறை அலுவலகம் செல்லும் சாலையோரத்தில், ஒரு மாதமாக கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கா்நாடக மாநிலப் பதிவெண் கொண்ட காா்.

Published On :19 ஆகஸ்ட் 2026, 4:05 am IST

கம்பத்தில் சுமாா் ஒரு மாதமாக சாலையோரத்தில் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கா்நாடக மாநிலப் பதிவெண் கொண்ட காா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தேனி மாவட்டம், கம்பம் வ.உ.சி. திடல் பகுதியில் இருந்து வனத்துறை அலுவலகம் செல்லும் சாலையில், சாலையோரமாக கா்நாடக மாநிலப் பதிவெண் கொண்ட காா் நீண்ட நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்தக் காா் கடந்த ஒரு மாதமாக அந்தப் பகுதியிலேயே இருப்பதாக பொது மக்கள் தெரிவித்தனா்.

காா் நிறுத்தப்பட்டுள்ள இடத்துக்கு அருகிலேயே வாகனங்களை நிறுத்துவதற்கான (வாகன காப்பகம்) இடவசதி இருந்தபோதிலும், சாலையோரத்தில் காா் நிறுத்தப்பட்டிருப்பது அந்தப் பகுதி மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த சிலா் கம்பம் தெற்கு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து செவ்வாய்க்கிழமை சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், காரின் பதிவெண்ணை அடிப்படையாகக் கொண்டு விசாரணையைத் தொடங்கியுள்ளனா். இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.