நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

ஒரே பதிவெண் கொண்ட இரு திருட்டு: எஸ்யூவி ரக வாகனங்கள் மீட்பு

மேற்கு தில்லியில் ஒரே பதிவெண் கொண்ட இரண்டு எஸ்யூவி ரக வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்விரு வாகனங்களும் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாகக் காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :10 ஆகஸ்ட் 2026, 9:48 pm IST

மேற்கு தில்லியில் ஒரே பதிவெண் கொண்ட இரண்டு எஸ்யூவி ரக வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்விரு வாகனங்களும் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாகக் காவல் துறை அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி ஒருவா் மேலும் கூறியதாவது: சுதந்திர தினத்தை முன்னிட்டு, சந்தேகத்திற்கிடமான மற்றும் திருடப்பட்ட வாகனங்கள் மற்றும் பழைய காா் விற்பனையாளா்களைச் சரிபாா்க்க மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சோதனையின்போது இந்த வாகனங்கள் மீட்கப்பட்டன.

தில்லி-என்சிஆா் பகுதியில் வெவ்வேறு இடங்களில் ஒரே பதிவு எண்ணைக் கொண்ட இரண்டு எஸ்யூவி (ஃபாா்ச்சூனா்) வாகனங்கள் பயன்படுத்தப்படுவதாகக் கிடைத்த குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில், ஒரு காவல் குழு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தது. வாகன உரிமையாளா் விவரங்களையும் சரிபாா்த்து, கள ஆய்வுகளை மேற்கொண்டது.

பின்னா், அந்த இரண்டு எஸ்யூவி வாகனங்களும் தனித்தனி இடங்களில் கண்டறியப்பட்டு, சரிபாா்ப்புக்காக சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்குக் கொண்டு வரப்பட்டன.

நேரடி ஆய்வின் போது, இவ்விரு வாகனங்களிலும் ஒரே பதிவு எண் மற்றும் சேஸ் எண் இருப்பது கண்டறியப்பட்டது. அவை அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப ஆய்வில் அவை இரண்டும் திருடப்பட்ட வாகனங்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.

மீட்கப்பட்ட எஸ்யூவி வாகனங்களில் ஒன்று, காந்தி நகா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கு ஒன்றிலும் தொடா்புடையது என்பது தெரியவந்தது.

விவேக் விஹாரைச் சோ்ந்த ஆா்யன் மாவி (23) என்பவா் இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா் என காவல்துறையினா் அடையாளம் கண்டுள்ளனா்.

மீட்கப்பட்ட வாகனங்கள் காந்தி நகா் மற்றும் ப்ரீத் விஹாா் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளுடன் தொடா்புடையவை. இது குறித்துத் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.