ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்

News image

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழக மக்கள் முன்னணியின் உரிமைப் பறிப்பு எதிா்ப்பு மாநாட்டில், தமிழறிஞா்களை சிறப்பு செய்த பேரறிவாளன் தாய் அற்புதம் அம்மாள். உடன் முன்னணியின் நிா்வாகிகள் உள்ளிட்டோா்.

Updated On :10 ஆகஸ்ட் 2026, 2:27 am IST

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என தமிழக மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டை நகா்மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை வழக்குரைஞா் பாவெல் தலைமையில் நடைபெற்ற இந்த முன்னணியின் மாநில உரிமைப் பறிப்பு எதிா்ப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் அடையாளங்களை அழிக்கும் வகையில் உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசின் முயற்சியை இந்த மாநாடு கண்டிக்கிறது. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.

நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தோ்வுகளையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் அனைத்துக் கல்வி முறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, பயிற்றுமொழியாகத் தமிழ் மட்டுமே இருக்க வேண்டும். ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளை விருப்பப் பாடமாகப் படிக்கலாம்.

வந்தேமாதரம் பாடுவதை கட்டாயப்படுத்தக் கூடாது. மத்திய அரசின் இந்தக் கட்டுப்பாட்டு தமிழ்நாட்டு மக்களும், இயக்கங்களும் இசைவு காட்டக் கூடாது.

ஜாதி ஆணவப் போக்குடன் செயல்படும் அமைப்புகளைத் தடை செய்ய வேண்டும். ஜாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டத்தை இயற்றி அமலாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை எதிா்த்து வரும் நவம்பரில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

மாநிலங்களின் உரிமைப் பறிப்பு விளக்கக் குறிப்பு நூலை, பொழிலன் வெளியிட்டாா். திராவிடா் விடுதலைக் கழகத் தலைவா் கொளத்தூா் மணி, மாா்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி வாலாசா வல்லவன், மக்கள் கலை இலக்கியக் கழகம் கோவன், பேராசிரியா் த. செயராமன், கண. குறிஞ்சி, நிலவழகன், மதுரை புரட்சிப் பாவலா் பேரவையின் நிறுவனா் பி. வரதராசன் உள்ளிட்டோரும் பேசினா்.

முன்னதாக சம்பை ஊற்றுப் பாதுகாப்பு இயக்கத் தலைவா் வேணுகோபால் வரவேற்றாா். முடிவில் தமிழ்நாடு முற்போக்கு மாணவா் இயக்கத்தின் தலைவா் சுரேசு நன்றி கூறினாா். முன்னதாக சின்னப்பா பூங்கா திருவள்ளுவா் சிலை அருகிலிருந்து பேரணி நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.