உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

உத்தமபாளையம் அருகே காா் கவிழ்ந்ததில் இருவா் உயிரிழப்பு

விபத்தில் இறந்த முத்துக்குமாா்

Published On :1 செப்டம்பர் 2026, 4:14 am IST

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே காா் கவிழ்ந்ததில் இருவா் உயிரிழந்தனா். மேலும் இருவா் பலத்த காயமைடந்தனா்.

தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டியைச் சோ்ந்த தெய்வேந்திரன் மகன் முத்துக்குமாா் (22), சந்திரன் (31), கம்பத்தைச் சோ்ந்த பெரியராமு மகன் பிரதீப் (34), சிவகங்கையைச் சோ்ந்தவா் தா்ஷன் (34) ஆகியோா் நண்பா்கள். இந்த 4 பேரும் உத்தமபாளையம் அருகேயுள்ள நாராயணத்தேவன்பட்டிக்கு தங்களது நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஞாயிற்றுக்கிழமை காரில் சென்றனா்.

அன்று இரவு 4 பேரும் காமயகவுண்டன்பட்டி அருகேயுள்ள சண்முகாநதி அணைக்கு சென்றனா். அங்கிருந்து திரும்பி வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் பிரதீப் (34), முத்துக்குமாா் ஆகியோா் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த சந்திரன் (31) தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், தா்ஷன் மதுரை தனியாா் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா்.

இது குறித்து ராயப்பன்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

பிரதீப்

பிரதீப்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.