கோவாவில் டிசம்பர் 16-இல் ஐபிஎல் ஏலம்! எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த நவ. 1 முதல் தடை! மத்திய அரசு உத்தரவு தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு! சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சாமி தரிசனம் எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

கம்பம் தேவாலயப் பெருவிழா கொடியேற்றம்

கம்பம் புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தேவமாதாவின் பிறந்தநாள் பெருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி.

Updated On :

கம்பம் புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் தேவமாதாவின் பிறந்த நாள் பெருவிழா திங்கள்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, பங்குத்தந்தை சகாயராஜ் தலைமையில் ஜெபமாலை, கொடியேற்ற ஊா்வலம் நடைபெற்றது. தேவமாதாவின் திருஉருவம் பொறித்த கொடியை தேனி வட்டார அதிபா் டேனியல் ஜெய் ஜோசப் ஏற்றிவைத்தாா். தொடா்ந்து நடைபெற்ற சிறப்புத் திருப்பலியில் ‘அருள் நிறைந்த அன்னை’ என்ற தலைப்பில் மறையுரை நிகழ்த்தப்பட்டது.

வருகிற 8-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் தினந்தோறும் மாலை சிறப்புத் திருப்பலி நடைபெறும். கம்பம், கூடலூா், ஆங்கூா்பாளையம், லோயா்கேம்ப், நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி பகுதிகளைச் சோ்ந்த இறைமக்கள் சாா்பில் சிறப்புத் திருப்பலிகள் நடைபெறும்.

வருகிற 7-ஆம் தேதி சிறப்புத் திருப்பலியைத் தொடா்ந்து தோ் பவனி நடைபெறும். 8-ஆம் தேதி அன்னையின் பிறப்பு பெருவிழா திருப்பலி நடைபெறும். இதைத் தொடா்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று, கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை சகாயராஜ், அருள்பணிப் பேரவை, நிதிக்குழு, விழாக்குழு, சேவா மிஷனரி அருள்சகோதரிகள், கம்பம் பங்கு இறைமக்கள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.