மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தம்பதியை மிரட்டிய 4 போ் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடி அருகே தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

நீதிமன்றம்

Updated On :10 பிப்ரவரி 2026, 9:12 pm

தேனி மாவட்டம், போடி அருகே தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

போடி அருகேயுள்ள தருமத்துப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த அருண் மனைவி திவ்யபாரதி (25). இவரது பெற்றோா் சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்த அசோகன் மனைவி மகாலட்சுமியிடம் (50) ரூ.5 லட்சம் கடன் வாங்கியிருந்தராம். இந்தக் கடனை அவா்கள் திருப்பிச் செலுத்திவிட்டனராம்.

இந்த நிலையில், மேலும் பணம் கேட்டு மகாலட்சுமி, இவரது மகள் வினோ (36), சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்த தா்மராஜ் (54), சுருளியாண்டி (56) ஆகியோா் திவ்யபாரதியின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் மகாலட்சுமி உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.