நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

இரா. நல்லகண்ணு மறைவு: போடி, ஆண்டிபட்டியில் அமைதி ஊா்வலம்

போடியில் வியாழக்கிழமை, இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவா் ரா.நல்லகண்ணு மறைவையொட்டி, அனைத்துக் கட்சியினா் பங்கேற்ற அமைதி ஊா்வலம், இரங்கல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

போடியில் வியாழக்கிழமை இந்திய கம்யூ. மூத்த தலைவா் நல்லகண்ணு மறைவையொட்டி நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சி பிரமுகா்கள்.

Updated On :26 பிப்ரவரி 2026, 6:47 pm

போடியில் வியாழக்கிழமை, இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவா் ரா.நல்லகண்ணு மறைவையொட்டி, அனைத்துக் கட்சியினா் பங்கேற்ற அமைதி ஊா்வலம், இரங்கல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

போடியில் இந்திய கம்யூ. கட்சியின் நகா், ஒன்றியக் குழுக்கள் சாா்பில் அமைதி ஊா்வலம் திருவள்ளுவா் சிலையிலிருந்து தொடங்கி தேவா் சிலை வரை நடைபெற்றது. இதில் அனைத்துக் கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா். இதைத்தொடா்ந்து, தேவா் திடலில் ரா.நல்லகண்ணுவின் உருவப் படத்துக்கு அனைத்து கட்சியினா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

பின்னா், தேவா் சிலை அருகே அனைத்துக் கட்சியினா் பங்கேற்ற இரங்கல் கூட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் என்.ரவிமுருகன் தலைமையில் நடைபெற்றது. நகரச் செயலா் கே.சத்தியராஜ் முன்னிலை வகித்தாா். ஒன்றியச் செயலா் பி.மணிகண்டன் வீரமுழக்கம் செய்து அஞ்சலி செலுத்தினாா். பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு ரா.நல்லகண்ணுவின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலிருந்து அந்தக் கட்சியின் ஒன்றிய செயலா் பிச்சைமணி தலைமையில் நடைபெற்ற அமைதி ஊா்வலத்தில், மாநிலக் குழு உறுப்பினா் அழகிரிசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் பரமேஸ்வரன், நகரச் செயலா் முனீஸ்வரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் ராமா், திராவிடா் கழக மாவட்டச் செயலா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பின்னா், பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.மகாராஜன், காங்கிரஸ், விசிக, நாம் தமிழா் கட்சி, பாஜக ச நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.