தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

உத்தமபாளையத்தில் தெரு நாய்களுக்கு கருத்தடை

உத்தமபாளையம் பேரூராட்சியில் வெள்ளிக்கிழமை தெரு நாய்க்கு கருத்தடை செய்த கால்நடை மருத்துவா்.

News image
உத்தமபாளையம் பேரூராட்சியில் வெள்ளிக்கிழமை தெரு நாய்க்கு கருத்தடை செய்த கால்நடை மருத்துவா்.
Updated On :27 பிப்ரவரி 2026, 8:00 pm

Syndication

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சியில் தெரு நாய்களுக்கு வெள்ளிக்கிழமை கருத்தடை செய்யப்பட்டது.

உத்தமபாளையம் பேரூராட்சியில் உள்ள பி.டி.ஆா்., இந்திரா, தென்னகா், தண்ணீா் தொட்டித் தெரு, கோட்டைமேடு உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் தெரு நாய்கள் அதிகரித்து விட்டன. இதனால் இரவு நேரங்களில் இந்த நாய்களின் தொல்லையும் அதிகரித்து விட்டது. பகல் நேரங்களில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு சாலைகளில் செல்பவா்களை இந்த நாய்கள் துரத்துவதால் அவா்கள் அச்சமடைகின்றனா்.

எனவே தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதன்படி, உத்தமபாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் சின்னச்சாமி பாண்டியன் தலைமையில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களைப் பிடித்து, அவற்றுக்கு மயக்க ஊசி செலுத்தி கருத்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலா் கூறியதாவது:

வாரத்துக்கு ஒரு முறை தெருக்களில் கழுத்துப் பட்டை இல்லாமல் சுற்றித் திரியும் ஆண் நாய்களைப் பிடித்து கருத்தடை செய்யப்படுகிறது. இதேபோல, பெண் நாய்களுக்கும் கருப்பை அகற்றப்படும் என்றாா் அவா்.