உத்தமபாளையத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ராஜாராம் (38). கூலி வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி மஞ்சு (31) அழகு நிலையம் நடத்தி வருகிறாா். இந்தத் தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பூக்கடை வீதியில் மஞ்சு நடத்தி வரும் அழகு நிலையத்துக்கு புதன்கிழமை ராஜாராம் சென்றாா். அங்கு திடீரென மஞ்சுவை கத்தியால் குத்திவிட்டு, உத்தமபாளையம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தாா். உடனே அங்கு சென்ற உத்தமபாளையம் போலீஸாா் பலத்த காயமடைந்த மஞ்சுவை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜாராமைக் கைது செய்தனா்.
தொடர்புடையது

தாா் தட்டுப்பாடு: உத்தமபாளையத்தில் கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணிகள்!
தூத்துக்குடியில் ஒப்பந்ததாரருக்கு கத்திக்குத்து: 2 போ் கைது

பெண் தூக்கிட்டுத் தற்கொலை
மதுப்புட்டிகள் பதுக்கி விற்ற 6 போ் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


