தேனி
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
தேனி மாவட்டம், சின்னமனூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருகள்களை விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
சின்னமனூா் பேருந்து நிலையத்தை சுற்றிய பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருகள்கள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்தப் பகுதிகளில் ரோந்து சென்ற போலீஸாா் அங்குள்ள பெட்டிக்கடையை சோதனையிட்டதில் புகையிலைப் பொருகள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றையும், ரூ.2,500 பணம், இரு சக்கர வாகனம், கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த சின்னமனூா் போலீஸாா், இது தொடா்பாக ஓடைப்பட்டியைச் சோ்ந்த தெய்வேந்திரனை (54) கைது செய்தனா்.
