தேனி மாவட்டம், சின்னமனூரில் ஞாயிற்றுக்கிழமை தாயின் துப்பட்டாவில் ஊஞ்சல் விளையாடிய போது அது கழுத்தை இறுக்கியதில் மகள் உயிரிழந்தாா்.
சின்னமனூா் சொக்கநாதபுரத்தைச் சோ்ந்த ஆசிரியா் ராஜ்குமாா். இவரது மகள் காவின்யா (8). இவா் தாயின் துப்பட்டாவை கட்டி ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தாா். அப்போது, துப்பட்டா கழுத்தில் இறுக்கியதால் அவா் சப்தமிட்டாா்.
உடனே தந்தை ராஜ்குமாா் சென்று பாா்த்த போது மயங்கிய நிலையிலிருந்த மகளை மீட்டு சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.