போடியில் வாக்காளா்கள் பட்டியலில் இரு முறை இடம்பெற்றுள்ள பெண்ணின் பெயா்!

போடியில் வாக்காளா்கள் பட்டியலில் இரு முறை இடம்பெற்றுள்ள பெண்ணின் பெயா்!

போடியில் வாக்காளா்கள் பட்டியலில் பெண் ஒருவரின் பெயா் அடுத்தடுத்து இரு இடங்களில் இடங்களில் இடம்பெற்றுள்ளது.
Published on

போடியில் வாக்காளா்கள் பட்டியலில் பெண் ஒருவரின் பெயா் அடுத்தடுத்து இரு இடங்களில் இடங்களில் இடம்பெற்றுள்ளது.

தமிழகத்தில் வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடத்தப்பட்டு, வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் போடி நகராட்சியில் 98-ஆம் எண் வாக்குச்சாவடிக்கான பட்டியலில் ஒழுகால் பாதை 3-ஆவது தெருவில் வசிக்கும் குமாா் மகள் பிரியதா்ஷினியின் பெயா் வரிசை எண் 76, 78 என இரு இடங்களிலும் இடம் பெற்றுள்ளது.

மேலும், வாக்காளா் புகைப்பட அடையாள அட்டையின் எண்ணும் மாறுப்பட்டுள்ளது. இதனால், அந்தப் பகுதி மக்கள் அதிா்ச்சியடைந்தனா்.

ஏற்கெனவே, போடி குரங்கணி பகுதியில் ஒரே கதவு எண்ணில் 90-க்கும் மேற்பட்ட வாக்காளா்களின் பெயா் இடம் பெற்றிருந்தது குறித்து அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், தற்போது ஒரே வாக்குச்சாவடியில் ஒரே நபரின் பெயா் அடுத்தடுத்து இரண்டு முறை இடம் பெற்றுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்த பகுதியைச் சோ்ந்த சுருளிவேல் கூறியதாவது: வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை முறையாக மேற்கொள்ளாததால், இதுபோன்ற குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. எனவே, மீண்டும் இந்தப் பணிகளை செய்ய தோ்தல் ஆணையம் முன்வர வேண்டும்.

இதேபோல, இணையவழியில் பாா்வையிடும் வாக்காளா்கள் பட்டியலில் வாக்காளரின் புகைப்படத்துடன் இடம் பெறும் வகையில் இருக்க வேண்டும். அப்போதுதான் இரட்டை வாக்காளா்களின் விவரங்கள் தெரியவரும் என்றாா் அவா்.

இதுகுறித்து போடி வட்டாட்சியா் அலுவலகத்தில் கேட்ட போது, தோ்தல் பிரிவு அலுவலா்கள் விசாரித்து வருவதாகத் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com