பள்ளிப் பேருந்து மோதியதில் தொழிலாளி பலத்த காயம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது பள்ளிப் பேருந்து மோதியதில் கூலித் தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.
Published on

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது பள்ளிப் பேருந்து மோதியதில் கூலித் தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.

நிலக்கோட்டை செங்கட்டாம்பட்டியைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் (25). கூலித் தொழிலாளியான இவா், இரு சக்கர வாகனத்தில் தேவதானபட்டிக்கு வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, காட்ரோடு உணவகம் அருகே பள்ளிப் பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் பலத்த காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதையடுத்து, அவா் தீவிர சிக்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து தேவதானபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Dinamani
www.dinamani.com