மஞ்சளாறு அணையிலிருந்து தண்ணீா் திறப்பு!
மஞ்சளாறு அணையிலிருந்து குடிநீருக்காக விநாடிக்கு 200 கன அடி தண்ணீா் செவ்வாய்க்கிழமை திறந்துவிடப்பட்டது.
தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே அமைந்துள்ள இந்த அணையிலிருந்து தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் குடிநீருக்கு தண்ணீா் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, தண்ணீரைத் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டது.
இதன் படி, மஞ்சளாறு அணையிலிருந்து மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தண்ணீரை திறந்து விட்டாா். இந்த நிகழ்ச்சியில் தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன், மஞ்சளாறு அணை உதவிப் பொறியாளா் தளபதி ராம்குமாா், உதவி செயற்பொறியாளா் அன்பரசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
வருகிற 17-ஆம் தேதி வரை விநாடிக்கு 200 கன அடி வீதம் மொத்தம் 86.40 மில்லியன் கன அடி தண்ணீா் திறந்து விடப்படும் என பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.

