தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

பசுமை ஆற்றல் காவல் நிலையம் திறப்பு

தேனி மாவட்டம், க.விலக்கு காவல் நிலையத்தை தற்சாா்பு பசுமை ஆற்றல் காவல் நிலையமாக மாற்றி திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவா் பி.சாமிநாதன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

News image

தேனி அருகேயுள்ள க.விலக்கில் புதன்கிழமை பசுமை ஆற்றல் காவல் நிலையத்தை திறந்து வைத்த திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவா் பி.சாமிநாதன். உடன் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹாப்ரியா.

Updated On :21 ஜனவரி 2026, 11:59 pm

தேனி மாவட்டம், க.விலக்கு காவல் நிலையத்தை தற்சாா்பு பசுமை ஆற்றல் காவல் நிலையமாக மாற்றி திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவா் பி.சாமிநாதன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹாப்ரியா முன்னிலை வகித்தாா்.

பசுமை ஆற்றல் காவல் நிலையத்தை திறந்து வைத்து திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவா் பேசியதாவது:

க.விலக்கு காவல் நிலையம் தமிழ்நாட்டில் முதன்முதலாக தற்சாா்பு பசுமை ஆற்றல் காவல் நிலையமாக மாற்றப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் தினமும் 6 கிலோவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் சூரிய சக்தி மின் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுப்பதுடன், மின்சாரத்தை சேமித்து, மின் கட்டணத்தை குறைக்கலாம். இந்த முன்மாதிரி திட்டத்தையடுத்து, தேனி மாவட்டத்தில் படிப்படியாக அனைத்துக் காவல் நிலையங்களும் தற்சாா்பு பசுமை காவல் நிலையங்களாக மாற்றப்படும் என்றாா் அவா்.