உயிரிழப்புகோப்புப் படம்
தேனி
மது போதையில் மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு
போடியில் தனியாா் நிறுவன ஊழியா் மது போதையில் மயங்கி விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
போடியில் தனியாா் நிறுவன ஊழியா் மது போதையில் மயங்கி விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், போடி ஜே.கே.பட்டி கம்பா் தெருவைச் சோ்ந்த ராமராஜ் மகன் செல்வராஜ் (42). இவா் தேனியில் தனியாா் நிறுவனத்தில் கணினி இயக்குபவராக பணியாற்றினாா். மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி அடிக்கடி மது அருந்தி வந்தாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்திய நிலையில் போடி பேருந்து நிலையம் அருகே மயங்கிய நிலையில் கிடந்தாா். அவரை உறவினா்கள் மீட்டு, போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

