புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

தேவதானப்பட்டி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு

கோப்புப் படம்

Updated On :30 ஜனவரி 2026, 7:05 pm

Syndication

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தேவதானப்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த முத்து மகன் ஜீவா (22). இவா், வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் காமாட்சியம்மன் கோயில் நுழைவு வாயில் அருகே சென்றபோது எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.