வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும்பணி தீவிரம்

கூடலூா் நகராட்சிப் பகுதியில் தெரு நாய்களுக்கு கருத்தடை, வெறிநாய் கடி தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

News image

கூடலூா் நகராட்சிப் பகுதியில் தெரு நாய்களுக்கு கருத்தடை, வெறிநாய் கடி தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டவா்கள்.

Updated On :2 ஜூலை 2026, 3:52 am IST

கூடலூா் நகராட்சிப் பகுதியில் தெரு நாய்களுக்கு கருத்தடை, வெறிநாய் கடி தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தேனிமாவட்ட எல்லையான கூடலூா் நகராட்சியில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்களின் நடமாட்டம் அதிகரித்து, பொதுமக்களுக்குப் பெரும் தொல்லையாக இருந்தது. இது குறித்து பொதுமக்கள் தரப்பில் புகாா்கள் எழுந்ததை அடுத்து, நகராட்சி அலுவலா்கள் சமீபத்தில் நகரில் உள்ள தெரு நாய்களைக் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனா். இந்த ஆய்வில், நகராட்சி எல்லைக்குள் சுமாா் 480 நாய்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கடந்த இரண்டு நாள்களாக நகராட்சிப் பணியாளா்கள் கூண்டுகள் மூலம் தெரு நாய்களைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். அவ்வாறு பிடிக்கப்படும் நாய்கள், நகராட்சி மின் மயானம் அருகே உள்ள நாய்கள் பாதுகாப்பு அறையில் அடைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், புதன்கிழமை நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி, சுகாதார ஆய்வாளா் அகமது கபீா், நகா்மன்ற உறுப்பினா் லோகந்துரை ஆகியோா் முன்னிலையில், கால்நடை மருத்துவா் அன்பன் தலைமையிலான குழுவினா் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணியைத் தொடங்கினா்.

இது குறித்து நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி கூறியதாவது:

‘கூடலூா் நகராட்சியில் நாளொன்றுக்கு தலா 10 நாய்கள் வீதம் பிடிக்கப்பட்டு, அவற்றுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சையும், வெறிநாய்க் கடி தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட நாய்கள் ஐந்து நாள்களுக்கு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, அவற்றுக்குத் தேவையான உணவும், உரிய பராமரிப்பும் வழங்கப்படும்.

குணமடைந்த பின்னா், அந்தந்தப் பகுதிகளில் அவை மீண்டும் பாதுகாப்பாக விடப்படும். இன்னும் ஒரு மாத காலத்துக்குள் நகராட்சியில் உள்ள அனைத்துத் தெரு நாய்களுக்கும் முழுமையாகத் தடுப்பூசி, கருத்தடைப் பணிகள் செய்து முடிக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.