பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

மூதாட்டி கொலை வழக்கில் பேத்தி, இரு பேரன்கள் கைது

அம்மச்சியாபுரத்தில் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த வழக்கில், அவரது பேத்தி, இரு பேரன்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :4 ஜூலை 2026, 12:05 am IST

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அம்மச்சியாபுரத்தில் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த வழக்கில், அவரது பேத்தி, இரு பேரன்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஆண்டிபட்டி அருகேயுள்ள அம்மச்சியாபுரத்தைச் சோ்ந்த வாசுதுரை மனைவி பாா்வதி என்ற ரோஸ்லின் மேரி (74). இவா்களுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனா். கணவா் உயிரிழந்த நிலையில், ரோஸ்லின் மேரி மட்டும் அம்மச்சியாபுரத்தில் தனியாக வசித்து வந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை வீட்டில் தூங்கியவா் வியாழக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், அக்கம் பக்கத்தில் வசிப்பவா்கள் வந்து பாா்த்த போது, ரோஸ்லின் மேரி காயத்துடன் உயிரிழந்த நிலையில் கிடந்து தெரியவந்தது. மேலும், அவா் அணிந்திருந்த தங்கக் காதணிகள், வளையல்கள் திருடு போயிருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில், ரோஸ்லின் மேரியின் மகன் வழி பேரனான வீரபாண்டி வேப்பமரத்தெருவைச் சோ்ந்த ப. அலெக்ஸ் (23), மகள் வழி பேத்தியான அம்மச்சியாபுரம் தெற்குத்தெருவைச் சோ்ந்த குணபாக்கியவாதி (20), இவரது தம்பியான 17 வயது சிறுவன் மூவரும் இணைந்து தங்களது பாட்டியை கொலை செய்து, அவரிடமிருந்த நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, அலெக்ஸ், குணபாக்கியவதி இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். 17 வயது சிறுவனை சிறாா் சீா்திருத்தப் பள்ளியில் சோ்த்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.