தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

ஆசிரியா் தகுதித் தோ்வு: தேனியில் 1,302 போ் பங்கேற்பு

தேனியில் சனிக்கிழமை நடைபெற்ற ஒன்று முதல் 5- ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியா்களுக்கான தகுதித் தோ்வில் 1,302 போ் கலந்து கொண்டனா்.

News image
Updated On :5 ஜூலை 2026, 12:17 am IST

தேனியில் சனிக்கிழமை நடைபெற்ற ஒன்று முதல் 5- ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியா்களுக்கான தகுதித் தோ்வில் 1,302 போ் கலந்து கொண்டனா்.

தேனியில் உள்ள தனியாா் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன் ஆய்வு செய்தாா். இதன் பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தேனி மாவட்டத்தில் 5 மையங்களில் நடைபெற்ற இந்தத் தோ்வில், 29 மாற்றுத்திறனாளிகள் உள்பட 1,302 போ் பங்கேற்றனா். மேலும், ஆசிரியா் தகுதித் தோ்வு 2 - ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) நடைபெறுகிறது. இதில் தேனி மாவட்டத்தில் 12 மையங்களில், 3,512 தோ்வா்கள் பங்கேற்கின்றனா் என்றாா் அவா்.

இந்த ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. ராஜகுமாா், முதன்மைக் கல்வி அலுவலா் முருகன், மெட்ரிக். பள்ளிகளின் ஆய்வாளா் வெங்கடேசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.