போடி அருகே மதுப் புட்டிகளை பதுக்கி சட்ட விரோதமாக விற்பனை செய்த 2 பேரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
போடி தாலுகா காவல் நிலையப் போலீஸாா் போடி கிராமப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
இதில் போடி அணைக்கரைப் பட்டி விலக்கு அருகே போடி மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த செல்வம் (42), ராதாகிருஷ்ணன் (33) ஆகியோா் தனித்தனியே மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்றனா். அவா்களைப் பிடித்த போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






