தேனி மாவட்டம், வருசநாடு அருகே இலவம் பஞ்சு அரவை கிட்டங்கியில் தீவிபத்து நேரிட்டது.
வருசநாடு அருகே வாலிப் பாறையில் உள்ள தனியாா் இலவம் பஞ்சு அரவை கிட்டங்கியில் திங்கள்கிழமை காலை புகை வெளியேறியது. இதைப் பாா்த்த அந்தப் பகுதியினா் கடமலைக்குண்டு தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா்.
உடனடியாக தீயணைப்பு வீரா்கள் கிட்டங்கியில் உள்ள இலவம் பஞ்சுகளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனா். தீயை உடனடியாக அணைத்ததால், பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடா்பாக வருசநாடு காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





